Friday, November 4, 2016

திரைக்கதை :6

அப்பா ஹானஸ்ட் -ஆர்த்தடாக்ஸ் -ஹிப்பாக்ரட் -ஆல்டர் நேட்டிவ் மெடிசின்ல நம்பிக்கை உள்ளவர் -   பாசிட்டிவ் திங்கர்- தியாகி - வெள்ளந்தி . தன்  அம்மா/தம்பிங்க/தங்கைக்காக எதையும் தியாகம் பண்ற பார்ட்டி. அவிக அதுக்கு குவாலிஃபைடானு பார்க்காத அளவுக்கு உத்தமர். ஜாய்ன்ட் ஃபேமிலி.

அம்மா எஜுக்கேட்டட்- கவுரவமான குடும்ப பின்னணி -செல்வச்செழிப்பு -சுண்டு விரல் அசைவுல புருசனை ஆட்டி வைக்கற கப்பாசிட்டி இருந்தாலும் ஏனோ அவர் மனம் கோணாம நடந்துக்கறாய்ங்க.

சினிமா துவங்கும் போதே அப்பா (50) அம்மா (48) நாலு பசங்க. இதுல 3 ஆவது பையன் தான் ஹீரோ .

டீன் எஜுக்கே உரிய எல்லா கருமாந்திரமும் உண்டு. அம்மாவுக்கு மார்ல கட்டி. இந்த மேட்டரை அப்பா -அம்மா குசு குசுன்னு பேசிக்கிட்டிருக்க -இடையில பூந்து அது கான்சரா இருக்கவும் வாய்ப்பிருக்குங்கறான் .

அப்பங்காரன் காச் மூச்சுனு கத்தி கலாட்டா ஆகுது. பையன் வீட்டுக்கு வரதை நிறுத்திர்ரான்.

அம்மா மார் கட்டிக்கு அசலான சிகிச்சை தவிர வேற  என்னல்லாம் வைத்தியம் செலாவணியில  இருக்கோ அதை எல்லாம் ட்ரை பண்றாரு.

ஒரு சித்தரை பார்க்க  வெளியூர் போறாய்ங்க. ட்ரெய்ன் ஆக்சிடென்ட்.  ஏதோ காரணத்தால அம்மா லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல ஏறியிருக்க அந்த பெட்டியே கருகி போயிருது . அப்படி ஏற இவரும் ஒரு காரணம். மூன்றாவது பையன் (ஹீரோ) அகஸ்மாத்தா அம்மாவ பார்த்து பேச முற்பட இவர் அவளை லேடீஸ் கம்பார்ட்மென்டுக்கு அனுப்பிர்ராரு.

________________

அப்பா  குற்ற உணர்ச்சியில   நடை பிணம். அவரோட  அம்மாகாரி /தம்பி/தங்கை எல்லாம் அவரோட "அதீதங்களை" கேள்வி கேட்காம ஆதரிச்ச படி செமர்த்தியா ஆட்டைய போடறாய்ங்க. பிள்ளைங்க வாத்யார் இல்லாத க்ளாஸ் ரூம் கணக்கா கும்மாளம் போடறாய்ங்க.

________________

அம்மா காரி ட்ரெய்ன் ஆக்சிடென்ட்ல சாகல. ஹீரோ லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல ஏறி அடுத்த ஸ்டேஷன்ல இறக்கி மார்கட்டிய அறுத்து பயாப்சி பண்ண வச்சு - யூட் ரஸ்ல கேன்சர்னு டயக்னைஸ் ஆகி யூட்ரசை ரிமூவ் பண்ணிர்ராய்ங்க. ஷி ஈஸ் ஆல் ரைட்.

_________________

இதுவரை தான்  ஃபிக்ஸ் ஆகியிருக்கன். தம்பதிகளின் மறு சந்திப்பை எப்படி கொண்டு போகலாம்? மக்கள் கருத்தே மகேசன் கருத்து .

என் ப்ரப்போசல் :

அம்மா காரி அருந்ததி ராய் கணக்கா ஒரு சமூக போராளி ஆகறாய்ங்க. ஹீரோவோட அப்பா ஒரு போலீஸ் ஆஃபீசர்னு வச்சுக்கலாம். மேற்படி சமூக போராளியின் வெகுஜன மக்கள்  போராட்டத்தை ஒடுக்க அனுப்பப்படறாருனு வச்சுக்கலாம். சினிமா இந்த பாய்ண்ட்ல இருந்தே ஆரம்பிக்கிறதா கூட வச்சுக்கலாம்.

_________

: (அரத பழசுதான் -ஆனால் ஒரு ஊர்ல ஒரு ராஜா கணக்கா சொல்லியிருக்கிற கதையை முன்னே பின்னே கொண்டு போனா/ ஒரு வில்லன் /ஹீரோவுக்கு ஒரு பேக் ட்ராப் /ஹீரோயின் இப்படி டெக்கரேட் பண்ணி அடிச்சு விட்டா  செம ஃபேமிலி என்டர்டெய்னர் ஆகும்ங்கோ)

உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லலாமே..

1 comment:

  1. ஃபேஸ்புக் இன்பாக்ஸ் உரையாடல்:

    இந்தக் கதை அந்தப் பெற்றோர்களை மையமாகக் கொண்டதோ?
    நோ பாஸ் ! தேர்ட் பாய் தான் ஹீரோ. அப்பன் வெர்சஸ் மகன்
    ஹிப்பாக்கிரசி வெர்சஸ் ப்ராக்டிக்காலிட்டி தான் நாட்
    _________
    அப்பாவோட பாலிசினால பையன் பாதிக்கப்பட்ட மாதிரி எதுவும் இருக்கா?
    அம்மாவை இழக்க இருக்கிறான்/ஆனால் துணிந்து காப்பாற்றி /அவளை அருந்ததிராய் ரேஞ்சுக்கு மாத்தறான்

    ReplyDelete