Friday, June 29, 2018

திரைக்கதை : 8

Image result for Gangster

ஊர்ல ஒரே ஒரு கேங் . ரெம்ப பவர்ஃபுல்லா இருக்கு. ஆனால் தலைவன் உட்பட ரெம்ப அடாவடி .
அந்த சமயம் படிச்ச பையன் ஒருத்தன் இதை எதிர்த்து நிக்கான்.
கேங் லீடரோட தம்பிக்கு அண்ணன் காரனோட அடாவடி பிடிக்கல.
படிச்ச பயலை போட்டுத்தள்ள சொல்லி அண்ணன் காரன் தம்பிய அனுப்ப /தம்பி காயப்படுத்தி விட்டுர்ரான்.
__________
காயப்பட்டவன் ரெக்கவர் ஆகி மல்லு கட்டறான். கேங் 1 -காரணமா பாதிக்கப்பட்டவிக இன்டைரக்டா ஃபைனான்ஸ் பண்றாங்க. அவனுக்கு அவனோட கசின் ஒருத்தன் தான் தளபதி .இவன் ஒரு வில்லங்கத்துக்கு பொறந்தவன்.


கேங்1 லீடர் இடைப்பட்ட காலத்துல ரெம்ப ஒர்ஸ்டா போறான். டீம்ல உள்ளவனுவ தங்கச்சி/பொஞ்சாதியை எல்லாம் கத்தி காட்டி காரியம் முடிக்கிறான். இது ஒருத்தனுக்கு தெரிஞ்சுருது .அவனுக்கு தெரியும்னு தம்பிகாரனுக்கு தெரியுது .
இங்கே இருந்து ஒன்னால ஒன்னும் பண்ண முடியாது. விலகிரு .அதான் சேஃப்டின்னு ரூட்ட போட்டு கொடுக்கிறான்.
அவன் கேங்2 வுக்கு ஷிஃப்ட் ஆயிர்ரான். அந்த சமயம் அவனுடைய இடத்துக்கு தூரத்து சொந்தம் ஒருத்தனை டெப்யூட் பண்றான் லீடர் . அந்த தூரத்து சொந்தம் வில்லங்கத்துக்கு பொறந்தவன்.

_______

கேங்2 மெல்ல தலை தூக்கி கவுண்டர் கொடுக்க ஆரம்பிக்கிறான். காலேஜ் எலீக்சன்/சாராய கடை டென்டர் இத்யாதி .
கேங் ஒன் லீடருக்கு கடுப்பானாலும் /எந்த தகிரியத்துல இவன் ஆடறான்னு ஒரு டவுட்டு.அடக்கி வாசிக்கிறான்.
________
இதுல ரெண்டு கேங்லயும் உள்ள வில்லங்கத்துக்கு பொறந்த பக்கிங்க ரெண்டாலயும் மோதல் வெடிக்குது .
ஒரு பவர்ஃபுல் எஸ்பி வேற டெப்யூட் ஆகி வராரு .
கேங் ஒன் லீடரோட தம்பியும் / கேங் 2 லீடரும் எஸ்.பி ஃபேக்டரை நினைச்சு அடக்கி வாசிக்க ட்ரை பண்றாங்க.ஆனால் வில்லங்கத்துக்கு பொறந்த 2 பயலும் விசிறி விசிறி பத்தி எரியுது .
_________

விதியில்லாத குறைக்கு கேங்1 லீடரை போட்டுத்தள்ளிருது கேங்2.
புது எஸ்பி கேங்2 லீடரை ராட்டினம் ஏத்தி க்ரூப்பை கதறடிக்கிறாரு .
ரெண்டு கேங்லயும் இருக்கிற வில்லங்கத்துக்கு பொறந்த பக்கிங்க ஊதி ஊதி பெருசாக்குதுங்க.
_______
கேங்2 லீடரோட கசினை போட்டுதள்ளிர்ராங்க. இப்ப கேங்1 லீடரோட டர்ன். அவனை ராட்டினம் ஏத்தி / க்ரூப்பை கதறடிக்கிறாரு எஸ்பி.
_________
இதுல நம்ம டச்சு என்னன்னா கேங்1 லீடரோட தம்பி /கேங் 2 லீடரோட டொமஸ்டிக் லைஃபையும் ஃபோக்கஸ் பண்ணுவம்.
இதே போல வில்லங்கத்துக்கு பொறந்த பக்கிங்களோட டொமஸ்டிக் லைஃபையும்.
__________
விளைவுகளை நான்கு குடும்பமும் சந்திக்கும் போது அவிக ரியாக்சன்/ கேங் லீடர்களோட ரியாக்சனையும் ஸ்ட் ராங்கா ரிவீல் பண்றம்.
_________
எஸ்பி ஒரு பக்கம் சட்டம் ஒழுங்குன்னு மெனக்கெட/ கேங் 1 -கேங்2 லீடர்ஸ் ரெண்டு பேரும் குடும்பத்தை நினைச்சு ரத்த கண்ணீர் வடிக்க
க்ளைமேக்ஸ்
கேங்1 ல இருக்கிற வில்லங்கத்துக்கு பொறந்த பயலை
ஆரோ விரட்டறாய்ங்க போட்டு தள்ள...யார்ரான்னு பார்த்தா எஸ்.பி.
வில்லங்கத்துக்கு பொறந்தவன் அடிச்சு பிடிச்சு ஓட
கேங்1 புது லீடர் கால்ல விழறான்.
ஸ்லோ மோஷன்ல அவ்னை எழுப்பி கேங்1 புதுலீடரே போட்டுத்தள்ளிர்ரான்.
இதை கேங் 2 லீடர் மறைஞ்சிருந்து தன்னோட காஸ்ட்லி மொபைல் ஃபோன்ல ஷூட் பண்றான்.
துரத்திக்கு வந்த எஸ்பியும் போட்டுத்தள்ளினவனும் மெர்சலாயிர்ராங்க.
கேங் 2 லீடர் தன் துப்பாக்கியால எஸ்பி ஆர்ம்ல சுட்டுட்டு அந்த துப்பாக்கில இருக்கிற தன் கைரேகையை துடைச்சுட்டு அதை ரத்த வெள்ளத்துல இருக்கிற வில்லங்க பார்ட்டி கையில வச்சுர்ரான்.
மொபைல்ல இருக்கிற மெமரி கார்டை கழட்டி எஸ்பி கையில கொடுத்துட்டு ஸ்டைலா நடந்து போய் தன் ஜீப்ல ஏறிப்போறான்.
எப்பூடி ??

Sunday, November 6, 2016

திரைக்கதை : 7

அண்ணே வணக்கம்ணே !

இந்த பதிவுல சொல்லப்போற கதை கொஞ்சம் மிஸ் ஆனாலும் கூகுள்ள தேடினா வர்ர காமக்கதைகள் மாதிரி ஆயிரும். ஆகவே ட்ரீட்மென்ட் தான் முக்கியம்.

பிரகாஷ் ராஜ் -சங்கீதா லவர்ஸ். ரெண்டு பேரும் ஏழைங்க.பிரகாஷ் ராஜுக்கு ஒரு ஆஃபர் வருது .சவுண்ட் ஃபேமிலில வீட்டோட மாப்பிள்ளையா போயிர்ராரு. சங்கீதா முட்டி மோத பிரகாஷ் ராஜ் வில்லத்தனமா பேசி அனுப்பிர்ராரு.சங்கீதாவும் பிரகாஷ் ராஜோட மனைவியும் ஒரே நேரத்துல கர்பம். ஒரே நர்சிங் ஹோம்ல பிரசவம். மனைவிக்கு குழந்தை செத்து பிறக்குது. சங்கீதாவுக்கு லட்டாட்டம் ஆண் குழந்தை .

பிரகாஷ் ராஜ் எத்தனையோ தமிழ்சினிமாக்கள் மாதிரி கையூட்டு கொடுத்து குழந்தையை மாத்திர்ராரு. ஆக சங்கீதாவின் குழந்தை பிரகாஷ் ராஜ் கிட்டே வளருது . பொஞ்சாதியும் செத்துப்போயிர்ரா. பதினெட்டு வருடங்களுக்கு பின்.

சங்கீதா தஸ்லீமா நஸ்ரின். மாதிரி எழுத்தாளராவோ - நம்ம ஹுசைன் மாதிரி ஓவியராவோ பெரும்புகழ் பெற்று ரிட்டர்ன்ஸ் ஃப்ரம் லண்டன். என்ன 18+18 = 36 வயசு முதிர் கன்னியா (?) சங்கீதாவோட மகன் ஒரு ரசிகனா நெருங்கறான்.

பிரகாஷ் ராஜ் பதறித்துடிக்கிறாரு. இது சங்கீதாவுக்கு டைம்பாஸா இருக்க .. வேணம்னே பிரகாஷ் ராஜ் மகனை (தன்) பைத்தியமா அடிக்கிறா. இதான் நாட்டு. க்ளைமேக்ஸ்ல விளக்கை அணைக்கறதுக்கு முந்தி அவன் தன் மகன் தான்னு சங்கீதாவுக்கு தெரியவரும். பைத்தியம் பிடிச்சுரும்.

Friday, November 4, 2016

திரைக்கதை :6

அப்பா ஹானஸ்ட் -ஆர்த்தடாக்ஸ் -ஹிப்பாக்ரட் -ஆல்டர் நேட்டிவ் மெடிசின்ல நம்பிக்கை உள்ளவர் -   பாசிட்டிவ் திங்கர்- தியாகி - வெள்ளந்தி . தன்  அம்மா/தம்பிங்க/தங்கைக்காக எதையும் தியாகம் பண்ற பார்ட்டி. அவிக அதுக்கு குவாலிஃபைடானு பார்க்காத அளவுக்கு உத்தமர். ஜாய்ன்ட் ஃபேமிலி.

அம்மா எஜுக்கேட்டட்- கவுரவமான குடும்ப பின்னணி -செல்வச்செழிப்பு -சுண்டு விரல் அசைவுல புருசனை ஆட்டி வைக்கற கப்பாசிட்டி இருந்தாலும் ஏனோ அவர் மனம் கோணாம நடந்துக்கறாய்ங்க.

சினிமா துவங்கும் போதே அப்பா (50) அம்மா (48) நாலு பசங்க. இதுல 3 ஆவது பையன் தான் ஹீரோ .

டீன் எஜுக்கே உரிய எல்லா கருமாந்திரமும் உண்டு. அம்மாவுக்கு மார்ல கட்டி. இந்த மேட்டரை அப்பா -அம்மா குசு குசுன்னு பேசிக்கிட்டிருக்க -இடையில பூந்து அது கான்சரா இருக்கவும் வாய்ப்பிருக்குங்கறான் .

அப்பங்காரன் காச் மூச்சுனு கத்தி கலாட்டா ஆகுது. பையன் வீட்டுக்கு வரதை நிறுத்திர்ரான்.

அம்மா மார் கட்டிக்கு அசலான சிகிச்சை தவிர வேற  என்னல்லாம் வைத்தியம் செலாவணியில  இருக்கோ அதை எல்லாம் ட்ரை பண்றாரு.

ஒரு சித்தரை பார்க்க  வெளியூர் போறாய்ங்க. ட்ரெய்ன் ஆக்சிடென்ட்.  ஏதோ காரணத்தால அம்மா லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல ஏறியிருக்க அந்த பெட்டியே கருகி போயிருது . அப்படி ஏற இவரும் ஒரு காரணம். மூன்றாவது பையன் (ஹீரோ) அகஸ்மாத்தா அம்மாவ பார்த்து பேச முற்பட இவர் அவளை லேடீஸ் கம்பார்ட்மென்டுக்கு அனுப்பிர்ராரு.

________________

அப்பா  குற்ற உணர்ச்சியில   நடை பிணம். அவரோட  அம்மாகாரி /தம்பி/தங்கை எல்லாம் அவரோட "அதீதங்களை" கேள்வி கேட்காம ஆதரிச்ச படி செமர்த்தியா ஆட்டைய போடறாய்ங்க. பிள்ளைங்க வாத்யார் இல்லாத க்ளாஸ் ரூம் கணக்கா கும்மாளம் போடறாய்ங்க.

________________

அம்மா காரி ட்ரெய்ன் ஆக்சிடென்ட்ல சாகல. ஹீரோ லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல ஏறி அடுத்த ஸ்டேஷன்ல இறக்கி மார்கட்டிய அறுத்து பயாப்சி பண்ண வச்சு - யூட் ரஸ்ல கேன்சர்னு டயக்னைஸ் ஆகி யூட்ரசை ரிமூவ் பண்ணிர்ராய்ங்க. ஷி ஈஸ் ஆல் ரைட்.

_________________

இதுவரை தான்  ஃபிக்ஸ் ஆகியிருக்கன். தம்பதிகளின் மறு சந்திப்பை எப்படி கொண்டு போகலாம்? மக்கள் கருத்தே மகேசன் கருத்து .

என் ப்ரப்போசல் :

அம்மா காரி அருந்ததி ராய் கணக்கா ஒரு சமூக போராளி ஆகறாய்ங்க. ஹீரோவோட அப்பா ஒரு போலீஸ் ஆஃபீசர்னு வச்சுக்கலாம். மேற்படி சமூக போராளியின் வெகுஜன மக்கள்  போராட்டத்தை ஒடுக்க அனுப்பப்படறாருனு வச்சுக்கலாம். சினிமா இந்த பாய்ண்ட்ல இருந்தே ஆரம்பிக்கிறதா கூட வச்சுக்கலாம்.

_________

: (அரத பழசுதான் -ஆனால் ஒரு ஊர்ல ஒரு ராஜா கணக்கா சொல்லியிருக்கிற கதையை முன்னே பின்னே கொண்டு போனா/ ஒரு வில்லன் /ஹீரோவுக்கு ஒரு பேக் ட்ராப் /ஹீரோயின் இப்படி டெக்கரேட் பண்ணி அடிச்சு விட்டா  செம ஃபேமிலி என்டர்டெய்னர் ஆகும்ங்கோ)

உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லலாமே..

Saturday, October 29, 2016

திரைக்கதை: 5

  • ஒரு கிராம‌ம். கிராம‌ம‌த்த‌னை பெரிய‌ கோவில். வ‌ருச‌த்துல‌ 364 நாள் அந்த‌ கிராம‌ ம‌க்க‌ள்தான் போய் வ‌ருவாங்க‌ . ஒரு நாள் ம‌ட்டும் ஜ‌னாதிப‌தி,பிர‌தம‌ர் உட்ப‌ட‌ எல்லோரும் வ‌ருவாங்க‌(சும்மா அப்ப‌டி க‌தை தானே).

    அந்த‌ கோவில் வாச‌ல்ல‌ ஒரு பிச்சைக்கார‌ன்,தேங்காய் விற்ப‌வ‌ன் ஒருத்த‌ன், ஒரு ரிட்டைய‌ர்ட் க‌வ‌ர்ன்மென்ட் உத்யோக‌ஸ்த‌ர் ஒருத்த‌ர். இவ‌ங்க‌ளை சுத்தி தான் க‌தை.
    (சொல்ல‌வே இல்லையே ப‌ட‌ம் மொத்த‌ம் க‌ருப்பு வெள்ளை/திருவிழா ம‌ட்டும் க‌ல‌ர்)

    ஒரு நாள் பிச்சைக்கார‌ன் செத்துர்ரான்.அவ‌ன் பிண‌ம் அநாதையா கிட‌க்கு. இதை பார்த்துட்டு தேங்காய் வியாபாரி த‌ன் நிலை இப்ப‌டி ஆக‌க்கூடாதுன்னு முடிவு க‌ட்றான்.

    தினசரி கோவிலுக்கு வந்து போற ரிட்டைய‌ர்ட் க‌வ‌ர்ன்மென்ட் உத்யோக‌ஸ்தரை அவர் வீட்டுல போய் பார்த்து பேசறான். தனக்கு ஏதாவது ஆகிப்போச்சுன்னா தன் இறுதி சடங்கை அவர் நடத்தனும்னு கேட்டு கிட்டு பணம் தர்ரான்.

    பத்து நாள் கழிச்சு தே.வியாபாரிக்கு ஒரு ஆக்ஸிடன்ட் நடக்குது. ஆஸ்பத்திரில அட்மிட். சுத்தி சுத்தி பார்க்கிறான். ரிட்டைய‌ர்ட் க‌வ‌ர்ன்மென்ட் உத்யோக‌ஸ்தரை காணோம்.

    டிஸ்சார்ஜ் ஆனபிறகு நேரா அவர் கிட்ட போறான். வீட்டு முன்னாடி பந்தல்,

    அவ‌ர் ம‌க‌ளுக்கு க‌ல்யாண‌ம் ந‌ட‌க்குது. இவ‌ன் போய் அந்தாளை ச‌ண்டை பிடிச்சு கொடுத்த‌ காசை திருப்பி கேக்கிறான். அவர் மகள் கையில இருக்கிற‌ ஒரு ஜோடி த‌ங்க‌ வ‌ளைய‌லை காட்ட‌றார். இவ‌ன் அதை பிடுங்கிகிட்டு வ‌ந்துர்ரான்.

    வ‌ரும்போது கிராஃபிக்ஸ்ல‌ விளையாட‌றோம். அந்த‌ வ‌ளைய‌ல் பெரிசாகி கிட்டே போகுது. இவ‌ன் திண‌ர்ரான். ஒரு க‌ட்ட‌த்துல‌ அது கீழ‌ இவ‌ன் ந‌சுங்கி போறாப்ப‌ல‌ காட்ட‌னும். உட‌னே ரிட்ட‌ர்ன் ஆஃப் தி ட்ராக‌ன். வ‌ளைய‌லை திருப்பி கொடுத்துர்ரான்.

    இனி 365 ஆவ‌து நாள் திருவிழா ந‌ட‌க்குது. ஸ்வாமிக்கு வெண்சாம‌ர‌ம் போட‌ற‌வ‌ன் காய்லா ப‌டுத்துர்ரான். அந்த‌ சேன்ஸு தே.வியாபாரிக்கு கிடைக்குது ,க‌டைய‌ ரிட்டைய‌ர்ட் க‌வ‌ர்ன்மென்ட் உத்யோக‌ஸ்த‌ர் பார்த்துக்க‌றார். தேர் மேல‌ ஸ்வாமி,ப‌க்க‌த்துல‌ தே.வியாபாரி சாம‌ர‌ம். உல‌க‌ டி.வி.,சேன‌ல் எல்லாம் அங்க‌யே கிட‌க்கு.(ஜ‌னாதிப‌தி,பிர‌த‌ம‌ர் எல்லாம் வ‌ராங்க‌ இல்ல‌).

    திருவிழா முடியுது. அய்ய‌ர் இற‌ங்கிறார். தே.வியாபாரி இற‌ங்க‌லை. இவ‌ர் உசுப்புறார்.அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல் ச‌ரிகிற‌து. உட‌னே டைட்டில்ஸ் ஆர‌ம்ப‌ம் எப்ப‌டி யிருக்கு?

திரைக்கதை: 4

  • பிரகாஷ் ராஜ் - அஜீத் ?
    பிரகாஷ் ராஜ் பண்ணையார் பையன், அஜீத் விவசாய கூலியோட பையன்.

    அஜீத்தோட காதலி சந்தர்ப்ப வசமா பிரகாஷ்ராஜை கண்ணாலம் கட்டவேண்டியதாயிருது.

    அஜீத் நக்ஸல்ஸ் மூவ்மென்டுக்கு போயிர்ராரு.பிரகாஷ் ராஜ் டெப்புட்டி கலெக்டர்.

    ஏதோ ஒரு துரத்தலில் அஜீத் பிரகாஷ்ராஜ் வீடு என்று அறியாது நுழைய -அங்கு பிரகாஷ்ராஜ் மனைவியை மலடி என்று குடும்பமே கொடுமைப்படுத்தி கொண்டிருக்க அஜீத் பிள்ளைவரம் கொடுத்துர்ராரு

    இருபது வருடங்கள் ஓடிருது. அஜீத் நக்சல் தலைவராயிர்ராரு.பிரகாஷ் ராஜ் ஸ்டேட் சீஃப் செக்ரட்ரி.

    -மானிலத்துல புதிய ஆட்சி வருது .நக்சல்ஸோட பேச்சு வார்த்தை நடக்குது.

    தன் பிள்ளைக்கு தகப்பன் தானல்லன்னு பிரகாஷ் ராஜுக்கு தெரியும். இதனால பேச்சு வார்த்தையை முறிக்க சதி செய்கிறார். ஜூனியர் அஜீத்..நக்சல் சிம்பத்தைசர்.

    சதியை முறியடிக்கிறார். பேச்சு வார்த்தை சக்ஸஸ் ஆகிறது.

    பிரகாஷ் ராஜின் ஈகோவை திருப்தி படுத்த அந்த காலத்துல சேகுவாரா கணக்கா அடுத்த நாட்ல இயக்கத்தை பலப்படுத்தறேன்னு சீனியர் அஜீத் கழண்டுக்கறாரு.

    இதுதான் கதை ஆனா எதை முன்னே -எதை பின்னே காட்டனுங்கறதுல தான் வித்தையே இருக்கு.

    சாதாரண அப்பா மகன் மோதல் கணக்கா ஓப்பனிங்குல ஆரம்பிக்கனும்..

திரைக்கதை: 3

சுருக்கம்:
விளம்பரத்தாலேயே உயர்ந்து விடலாம் என்று இளம் வயதிலேயே நம்பிவிடும் ஒருவன் அதன் எல்லைக்கே போய் -சகலத்தையும் இழந்து - உலகத்தையே விளம்பரத்தில் இருந்து காப்பாற்றுகிறான்.

1.ஜெனட்டிக் காஸ் 
அப்பா,அம்மா சுய விளம்பர பைத்தியங்கள். அப்பா பஸ் ஸ்டாண்ட்ல சினிமா பாடல்களுக்கு இடையில் விளம்பரங்களை "பேசும்" அமெச்சூர் ஜாக்கி .
அம்மா கோழியடிச்சு குழம்பு வச்சாலே அக்கம் பக்கம்லாம் போயி கோழி அடிச்சு குழம்பு வச்சு சாப்டமா சூடாயிருச்சு போல அடி வயிறு வலிக்குது கொஞ்சம் வெளக்கெண்ணெய் இருந்தா கொடேன் கேஸு. 

2.என்விரான்மென்டல் காஸ் 
ஸ்கூல்,கொலிக்ஸ்,டீச்சர் எல்லாமே இதே கேஸு. ஈரோவுக்கு படிப்பு ஏர்ரதில்லை.ஐடிஐ -ல சேர்த்து விட்டுர்ராய்ங்க. நம்மாளுது டெக்னிக்கல் ப்ரெய்ன். எதையோ புதுசா செய்து சைன்ஸ் ஃபேர்ல வைக்க பார்க்கிறான். வேலைக்காகல.
கலெக்டர் வர்ர சமயம் வாத்யாரு தனக்கு வேண்டப்பட்ட பையனை முன்னே தள்ளி ஈரோவ டார்க் அவுட் பண்ணிர்ராரு.

ரேடியோ கடையில வேலைக்கு சேர்ரான். ஓனர் பெரிய டுபாக்கூர். வேலையே தெரியாது .கொத்து கொத்தா பாம்லெட் அடிச்சு சந்தையில கொடுத்து வேற ஆளு கிட்டே கொடுத்து ரிப்பேர் பார்த்து பேர் வாங்கறான்.

திருப்பம்:1
இதை எல்லாம் பார்க்கிற ஈரோ ஓஹோ வாழ்க்கையில திறமைங்கறது வேஸ்ட்.உழைப்பெல்லாம் வீண். விளம்பரம் தான் முக்கியம்.பந்தா பண்ணாதான் க்ளிக் ஆக முடியும்ங்கற முடிவுக்கு வந்துர்ரான்.

மார்க்கெட்ல டிவி வருது -வாண்டட் சர்வீஸ் ட்ரெய்னிஸ்னு விளம்பரம் வருது. விளம்பரம் கொடுத்தவுக தென்னிந்திய மார்க்கெட் லீடர்ஸ்.இயல்பா தனக்குள்ளே இருக்கிற திறமை காரணமா வேலை கத்துக்கறான்.அதே சமயம் தான் புதுசா ஆக்செப்ட் பண்ணிக்கிட்ட ப்ரின்சிப்பிள் காரணமா தன்னை பயங்கரமா ஃபோக்கஸ் பண்ணிக்கிட்டு ட்ரெய்ன் பண்ண வந்தவனை மொக்கை ஆக்கி அவன் பொசிஷனுக்கு ஈரோ வந்துர்ரான்.

கம்பெனி எம்.டி யை கவுத்து அவர் மகளை கல்யாணம் கட்டிக்கிறான். ஜஸ்ட் விளம்பர பலத்தை கொண்டு விஜய் மால்யா ரேஞ்சுக்கு வந்துர்ரான்.( ரேஞ்சுன்னா எல்லாமே வெட்டி விளம்பரம்-வங்கிக்கடன் )இது ஒன் ஃபைன் மார்னிங் தெரிஞ்சு போயி மாமனாரு ஹார்ட் அட்டாக்ல டிக்கெட்டு.

பொஞ்சாதிக்கு இந்த மேட்டர்லாம் தெரியவே தெரியாது.அவள் ஒரு பக்கம் வெட்டிச்செலவுகள்.அவள் தம்பி ஒரு பக்கம் சினிமா எடுக்கறேன்னு மொட்டை.
ஈரோவை சுத்தி கயிறு இறுகுது. விளம்பர பாக்கிக்காக மீடியா மாஃபியா ஈரோவை பிசியறாய்ங்க. கொடவுன்ல போட்டு பின்றாய்ங்க.மானத்தை வாங்கறாய்ங்க. வங்கி நோட்டீஸ் , ஏல நோட்டீஸ்,ஜப்தி நோட்டீஸ்னு பொளப்பு நாறிப்போகுது.ரெண்டு வட்டியில ஆரம்பிச்சு மீட்டர் வட்டி வரை போயிர்ரான்.

கடன் கொடுத்தவுக விரட்ட எல்லாத்தையும் விட்டுட்டு ஓடறான் ஓடறான். தனக்கு வேலை கத்து கொடுத்த குருவை சந்திக்கிறான். அவர் ஒரு மலை உச்சியில ப்ளெசன்ட் லைஃப்.

தன் பொளப்பு நாறிப்போனதை சொல்லி புலம்பறான். அன்னைக்கே நீங்க என்னை கைட் பண்ணியிருந்தா இந்தளவுக்கு ஆயிருக்காதே னு கோபப்படறான். எனக்கு மட்டும் ஆண்டவன் சக்தியை கொடுத்தான்னா இந்த உலகத்துலருந்தே விளம்பரத்தை ஒழிச்சுருவன்னு ஆவேசப்படறான்.

அவரு ஒரு எக்விப்மென்டை காட்டறாரு " இது நான் சொந்தமா டிசைன் பண்ணது. சவுண்ட் வேவ் ரெகக்னைஸர் அண்ட் ஆட்டோ சானல் சேஞ்சர் " டிவியில ஆடியோ ,வீடியோ அவுட் புட் செக்சன்ல இதை ஃபிக்ஸ் பண்ணிட்டா நாம பார்க்கிற சானல்ல விளம்பரம் ஆரம்பிச்சதுமே இது அடுத்த ஃபேவரைட் சானலுக்கு மாத்திரும். அதுல விளம்பரம் வந்தா அடுத்த ஃபேவரைட் சானல்- இப்படியே 7 சானல் வரை மாத்தும் - அதுல விளம்பரம் வந்தா மொத ஃபேவரை சானலுக்கு மாத்திரும். இதை ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டா சனம் விளம்பரத்தையே பார்க்காம நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்கலாம். இனி விளம்பரத்தால எவனும் உசர முடியாது.இதுக்கு பேட்டன்ட் வாங்கி தயாரிச்சு மார்க்கெட் பண்ணி உன் பிரச்சினையை எல்லாம் தீர்த்துக்க"ங்கறாரு.

நம்ம ஈரோ "இதை நீங்களே தயாரிச்சு லாபம் பார்க்கலாமே"ங்கறாரு. அதுக்கு அவரு "இதுவும் ஒரு விளம்பரம் தானேப்பா.. விதை இருட்ல தான் முளை விடும். கரு இருட்டுல தான் உருவாகும். வெளிச்சம் எனக்கு சேராது"ன்னிர்ராரு.

ஈரோ அந்த எக்விப்மென்ட் எப்படி வேலை செய்யுதுன்னு டெமான்ஸ்ட் ரேட் பண்ணி ஷூட் பண்ணி ஒரு சிடியை தயாரிச்சு காப்பி எடுத்து விளம்பர செலவுல டாப் டென் பொசிஷன்ல இருக்கிற கம்பெனிகளுக்கு அனுப்பறாரு.
ஒடனே சானல் விளம்பங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு ப்ரிண்ட் மீடியாவுல விளம்பரங்கள் வெளி வருது. ஈரோ தன் குருவை மறுபடி சந்திக்கிறான்.அவரு ஒரு கண் கண்ணாடிய கொடுக்கிறாரு. பேப்பர் படிக்கிறவன் இதை மாட்டிக்கிட்டா விளம்பரம்லாம் பஜ்னு ஆயிரும். நியூஸ் கன்டென்ட் மட்டும் பளிச்சுன்னு தெரியும்ங்கறாரு.
இதை மேற்படி கம்பெனிகளுக்கு ஈரோ இன்ஃபார்ம் பண்ண அடுத்து ப்ரிண்ட் மீடியா விளம்பரங்களும் நிறுத்தப்பட்டு ஆட்டோ அனவுன்ஸ்மென்ட்ஸ் தூள் பறக்குது.மறுபடி குருவுடன் சந்திப்பு அவர் ஹியரிங் எய்ட் கணக்கா ஒரு எக்விப்மென்டை தராரு.

இதுக்குள்ள இந்திய பொருளாதாரமே தள்ளாடுது. ஈரோவை போட்டு தள்ள வாடகை கொலையாளிகள் அமர்த்தப்படறாய்ங்க. ஈரோ பேச்சு வார்த்தைக்கு போறாரு.


விளம்பரங்களை கிழி கிழின்னு கிழிக்கிறாரு. இந்திந்த நிபந்தனைகளுக்குட்பட்டு விளம்பரம் வெளியிடறதா இருந்தா என் ப்ராடக்ட்ஸை வெளியவிடமாட்டேன். இல்லேன்னா நீங்க என்னை கொன்னுருவிங்கனு தெரியும். டோன்ட் கேர். இதுகளுக்கான ஃபார்முலாவை ஆன்லைன்ல வச்சுட்டன். என் பேரை அடிச்சு தேடினாலே தகவல் வெள்ளம் கொட்டும்ங்கறாரு.

பேச்சு வார்த்தை முறிய வெறுங்கையா வெளிய வர்ராரு. அதுக்குள்ள செய்தி பரவி மக்கள் கூட்டம் வெளிய கூடிருது. கடன் காரவுக சவுக்கம் போட -விளம்பரங்களால பாதிக்கப்பட்டவுக எல்லாம் ஆளுக்கு அஞ்சு பத்து போட்டு ஈரோவோட கடனை எல்லாம் தீர்த்துர்ராய்ங்க.