Saturday, October 29, 2016

திரைக்கதை: 4

  • பிரகாஷ் ராஜ் - அஜீத் ?
    பிரகாஷ் ராஜ் பண்ணையார் பையன், அஜீத் விவசாய கூலியோட பையன்.

    அஜீத்தோட காதலி சந்தர்ப்ப வசமா பிரகாஷ்ராஜை கண்ணாலம் கட்டவேண்டியதாயிருது.

    அஜீத் நக்ஸல்ஸ் மூவ்மென்டுக்கு போயிர்ராரு.பிரகாஷ் ராஜ் டெப்புட்டி கலெக்டர்.

    ஏதோ ஒரு துரத்தலில் அஜீத் பிரகாஷ்ராஜ் வீடு என்று அறியாது நுழைய -அங்கு பிரகாஷ்ராஜ் மனைவியை மலடி என்று குடும்பமே கொடுமைப்படுத்தி கொண்டிருக்க அஜீத் பிள்ளைவரம் கொடுத்துர்ராரு

    இருபது வருடங்கள் ஓடிருது. அஜீத் நக்சல் தலைவராயிர்ராரு.பிரகாஷ் ராஜ் ஸ்டேட் சீஃப் செக்ரட்ரி.

    -மானிலத்துல புதிய ஆட்சி வருது .நக்சல்ஸோட பேச்சு வார்த்தை நடக்குது.

    தன் பிள்ளைக்கு தகப்பன் தானல்லன்னு பிரகாஷ் ராஜுக்கு தெரியும். இதனால பேச்சு வார்த்தையை முறிக்க சதி செய்கிறார். ஜூனியர் அஜீத்..நக்சல் சிம்பத்தைசர்.

    சதியை முறியடிக்கிறார். பேச்சு வார்த்தை சக்ஸஸ் ஆகிறது.

    பிரகாஷ் ராஜின் ஈகோவை திருப்தி படுத்த அந்த காலத்துல சேகுவாரா கணக்கா அடுத்த நாட்ல இயக்கத்தை பலப்படுத்தறேன்னு சீனியர் அஜீத் கழண்டுக்கறாரு.

    இதுதான் கதை ஆனா எதை முன்னே -எதை பின்னே காட்டனுங்கறதுல தான் வித்தையே இருக்கு.

    சாதாரண அப்பா மகன் மோதல் கணக்கா ஓப்பனிங்குல ஆரம்பிக்கனும்..

No comments:

Post a Comment