Saturday, October 29, 2016

திரைக்கதை : 1

ஒரு மலை கிராமம். அங்கு ஒரு தலைவர்(பிழைக்க தெரியாத). ஒரு கோவில். ஒரு அம்மன். அம்மன் கழுத்தில் ஒரு வைர மாலை.(அதற்கு லாஜிக்கலான கிளைக்கதை- பிரிட்டீஷ் காலத்துல ஒரு அதிகாரியோட மகள் அந்த அம்மன் அருளால் உயிர் பிழைக்கிறாள் - நன்றி கடனாக மேற்படி அதிகாரி வைர மாலை சமர்ப்பித்தார் அண்ட் ஆல் தட்) 

அதே ஊர்ல 16 வயதினிலே கணக்கா சப்பாணி மாதிரியான ஒரு நாயகன், வெள்ளந்தியான நாயகி. ஒரு லட்சியவாதி ஆசிரியர்.

பவர் இல்லாத காரணத்தால் படிப்பில் பின் தங்குவதாக கருதி ஆசிரியர் பவர் கேட்டு அலைகிறார். இறுதியில் ஸோலார் பவர் பெற திட்டம். அதற்கு காசு வேண்டும்.


விஜயகாந்த் மாதிரி புதிதாக அரசியலுக்கு வந்த நடிகரை தானம் கேட்டு மானம் போகிறது. ஊர் தலைவர் சப்பாணியை சூப்பர் ஸ்டார் ஆக்குவதாக சபதம். அம்மன் கழுத்து வைரமாலையை அடகு வைத்து லோ பட்ஜெட் படம் தயாரிக்கிறார்கள்.

கிராமம்,சப்பாணி இருவருக்கும் பவர் கிடைக்கிறது.

அத‌ன் விளைவுக‌ள் எதிரிடையாக‌ இருக்கிற‌து.

கிராம‌த்து பெரிய‌வ‌ர் சோலார் ப‌வ‌ர் யூனிட்டை வெடி வைத்து த‌க‌ர்க்கிறார்..டைட்டில்ஸ்

No comments:

Post a Comment